க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு உரிய திகதியில் நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதுதொடர்பாக வருகின்ற வதந்திகளை நம்பாமல் பரீட்சைக்குத் தயாராகவும்.
உத்தியோகபூர்வமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
