தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண ஆசிரியர்களின் 2021ஆம் ஆண்டிற்கான இடமாற்றங்கள் எதிர்வரும் 2022.05.18ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அவர்கள் தற்போது கடமை புரியும் வலயங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவ் வலயக் கல்வி அலுவலகங்களினூடாக அவை உரிய ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆசிரியர்கள் தங்களின் புதிய இடமாற்ற வலயத்திற்கான வலயக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து தங்கள் இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று 2022.05.18ம் திகதியன்று புதிய பாடசாலையில் தங்களின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மேலும், தற்போது கடமையாற்றும் பாடசாலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் அனைத்தையும் முறையாக கையளித்து, உரிய முறையில் விடுவிப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதோடு, இடமாற்றங்களுக்காக எந்தவித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளார்.
