சாதாரண தர பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை



க.பொ.த சாதாரண தர 2021ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுப் பரீட்சை எதிர்வரும் 2022.05.23ஆந் திகதி நாடளாவிய ரீதியாக ஆரம்பமாகி 2022.06.01 வரை நடைபெற உள்ளமையால், சாதாரண தர பரீட்சையுடன் தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்திற்கும் 2022.05.17ஆந் திகதி நள்ளிரவுடன்  பரீட்சைத் திணைக்களம் தடை விதித்துள்ளது.

17ஆந் திகதியின் பின்னர் இத் தடையை மீறி வகுப்புகள மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவோருக்கு பரீட்சைச் சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை நடாத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை