தற்போது வெளியாகி உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணிப் பட்ட இரண்டாம் ஆண்டுப் பரீட்சைப் பெறுபேற்றினை மீள் ஆய்வு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கல்விமாணிப் பட்டப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வானது இன்றிலிருந்து (2022.06.07) ஏழு தினங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மீளாய்வு செய்ய விரும்புவர்கள் பரிந்துரைக் கடிதத்துடன், பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவகம் - இலங்கை வங்கிக் கணக்கிற்கு ரூபா 5,000.00 வைப்புச் செய்து குறித்த பற்றுச்சீட்டுடன் தங்களுடைய விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
பெறுபேறானது வித்தியாசம் ஏற்பட்டிருப்பின் மாத்திரம், வைப்புச் செய்யப்பட்ட குறித்த பணம் திருப்பிச் செலுத்தப்படும். அதேவேளை, பெறுபேற்றில் எந்தவித வித்தியாசமும் ஏற்படாது இருப்பின், குறித்த பணம் மீளளிக்கப்பட மாட்டாது என்பதை விண்ணப்பதாரிகள் கவனத்தில் கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
பணிப்பாளர் +94 11 7601620 | +94 11 7601621
பெறுபேற்றுப் பிரிவு +94 11 7601769
