பட்டப்பின் கல்வி டிப்ளோமா 2022/2023 - PGDE 2022/2023


தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

SLQF Level 8

தேசிய கல்வி நிறுவகத்தினால் முன்னெடுக்கப்படும்; 36 திறமை மட்டங்களைக் கொண்ட பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கான 2022/2023 கல்வியாண்டிற்கு தமிழ்மொழி மூலம் தகைமை  பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


1.0 விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் அல்லது தேசிய கல்வி நிறுவக  பேரவை அங்கீகரித்த வேறுநாட்டு பிரஜையாக இருத்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவகம் ஒன்றின் மூலம் (குறைந்தது மூன்று வருடம்) இளமானிப் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்
  • இலங்கை ஆசிரியர் சேவை  இலங்கை அதிபர் சேவை / இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை / இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை / இலங்கை கல்வி நிருவாக சேவை ஒன்றில் இணைந்த அரச / அரச உதவி பெறும் பாடசாலையொன்றில்   பிரிவெனாவொன்றில் / அரச அனுமதி பெற்ற மதக் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அல்லது தேசிய கல்வி நிறுவகத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது உயர் கல்வி நிறுவகம் ஒன்றில் கல்விசார் அங்கத்தவராக இருத்தல் 
  • நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் சேவையில் இருத்தல்
அல்லது 
  • தேசிய கல்வி நிறுவகப் பேரவை ஏற்றுக்கொள்ளக் கூடிய சமமான வேறு தகைமைகள்

 

2.0 கற்கை நெறியின் இயல்பு

இக் கற்கைநெறியானது வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பகுதி நேர 18 மாதங்களைக்; கொண்ட கற்கை நெறியாகும். அத்துடன் நிகழ்நிலை (Online); மற்றும் நேரடி வகுப்பு அமர்வுகள் (கலவைமுறைக் கற்றல் -  Blended Learning) மூலமாக கல்விசார் நடவடிக்கைகள் பிராந்திய கற்கை நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.


 

3.0 தெரிவு செய்தல்

விண்ணப்பதாரிகள் எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலமாக அல்லது நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலமாக மட்டும் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்படுவர்.


 

4.0 ஆகக் குறைந்தது ஐம்பது பயிலுனர்களைக் கொண்டிராத பிராந்திய கற்கை நிலையங்களில் கற்கைநெறி நடத்தப்படமாட்டாது. இவர்களுக்கு தமது இரண்டாவது விருப்பின் அடிப்படையில் தெரிவு செய்த பிராந்திய கற்கை நிலையம்; வழங்கப்படும். (இது தொடர்பான இறுதித் தீர்மானம் பணிப்பாளர் நாயகம் அவர்களுடையதாகும்)

5.0 கற்கைநெறிக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணமாக ரூ 1,500.00 அறவிடப்படும். 
  • பதிவுக் கட்டணம் ரூ 2,000.00, 
  • கற்கைநெறிக் கட்டணம் ரூ 80,000.00 ஆகும். 
  • கற்கை நெறிக் கட்டணத்தினை இரு தவணைகளில் செலுத்த முடியும்.
(முதலாம் தவணைக் கட்டணம் ரூ 50,000.00, இரண்டாம் தவணைக் கட்டணம் ரூ 30,000.00).
கற்கைநெறிக்குப் பதிவு செய்யும் போது பதிவுக் கட்டணமும் முதலாம் தவணைக் கட்டணமும் ரூ 52,000.00 செலுத்தப்பட வேண்டும். 
இவற்றிற்கு மேலதிகமாக பரீட்சைக்கு தோற்றும் போது உரிய பரீட்சைக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும்.

06. கற்கைநெறி நடத்தப்படும் பிராந்திய கற்கை நிலையங்கள்

இல பிராந்திய கற்கை நிலையங்கள்
01 மஹரகம (தேசிய கல்வி நிறுவகம்)
02 கண்டி (பத்தியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி)
03 கொட்டகலை (அரசினர் ஆசிரியர் கலாசாலை)
04 பதுளை (பாரதி தமிழ் மஹா வித்தியாலயம்)
05 திருகோணமலை (விக்னேஸ்வரா மஹா வித்தியாலயம்)
06 வவுனியா (முஸ்லிம் மஹா வித்தியாலயம் - தேசிய பாடசாலை)
07 கிளிநொச்சி (கிளிநொச்சி மத்திய கல்லூரி)
08 யாழ்ப்பாணம் (மத்திய கல்லூரி)
09 அட்டாளைச்சேனை (அஸ் ஸிராஜ் மஹா வித்தியாலயம்- தேசிய பாடசாலை)
10 மட்டக்களப்பு (மெதடிஸ்ட் மத்திய கல்லூரி)
11 புத்தளம் (எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயம்)
12 அனுராதபுரம் (சாஹிரா கல்லூரி - தேசிய பாடசாலை)
13 காலி (முஸ்லிம் மகளிர் கல்லூரி, தலாபிட்டிய)
14 இரத்தினபுரி (அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)

7.0 விண்ணப்பிக்கும் முறை

(அ) தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை (Click hereA4 தாளில் தனிப்பக்கத்தில் தயாரித்து, பூரணப்படுத்தி இலங்கை வங்கியில் உள்ள பணிப்பாளர் நாயகத்தின் கணக்கு இலக்கம் 607628 க்கு இலங்கையின் எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலும் ரூ1,500.00 செலுத்திப் பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டுடன் (மூலப் பிரதி), சுய விலாசமிட்டு ரூ50.00 முத்திரை ஒட்டப்பட்ட 9’X4’ அளவுடைய தபால் உறையினையும் இணைத்து 21.09.2022 ஆந் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக  Director, Department of Teacher Education, National Institute of Education, Maharagama, 10280  என்ற முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
 
காசோலைகள், காசுக் கட்டளைகள் மற்றும் இலங்கை வங்கி அல்லாத வேறு வங்கிகளில் பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டுகள்; ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
 
(ஆ) தபாலில் அனுப்பபடும் விண்ணப்ப படிவத்திற்கு மேலதிகமாக  www.nie.lk என்ற இணையத்தளத்தினூடாக நிகழ்நிலை வழியிலும் விண்ணப்பம் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும். (Google form)

 
(இ) தேசிய அடையாள அட்டை, பட்டச் சான்றிதழ் மற்றும் பதவி நியமனக் கடிதம் என்பவற்றின் நிழற்பிரதிகளை மட்டும் (A4 அளவு) தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அல்லது திணைக்களத் தலைவர் மூலமாக உறுதிப்படுத்தி, விண்ணப்பத்துடன் இணைக்கவும். (இவ் ஆவணங்களை மட்டும் இணைக்கவும்)

(ஈ) 21.09.2022 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களும், முறையாகப் பூரணப்படுத்தப்படாத, உறுதிப்படுத்திய நிழற் பிரதிகள் இணைக்கப்படாத மற்றும் உரிய தகைமைகளைக் கொண்டிராத விண்ணப்பப் படிவங்களும் நிராகரிக்கப்படும்.

8.0 கற்பித்தல் பயிற்சி

தெரிவு செய்யப்படும் பயிலுனர்கள் 10 வாரங்கள் செய்முறைக் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கற்பித்தலில் ஈடுபடாத கல்விச் சேவையில் உள்ள கல்விசார் அதிகாரிகள் இதன் பொருட்டுப் பொருத்தமான பாடசாலை ஒன்றினைத் தெரிவு செய்து கொள்ளும் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது.

9.0 தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில்  ‘PGDE 2022 / T’  எனக் குறிப்பிடவும். விண்ணப்பப் படிவம் மற்றும் கற்கைநெறி விபரங்களை www.nie.lk என்ற தேசிய கல்வி நிறுவக இணையத்தளத்தில் மற்றும் Channel NIE (YouTube) தரவிறக்கம் செய்ய முடியும். 

மேலதிக விபரங்களுக்கு அலுவலக நேரத்தில் பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை 0117 601 744 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெறலாம்.

பணிப்பாளர் நாயகம்
தேசிய கல்வி நிறுவகம்

கருத்துரையிடுக

புதியது பழையவை