2022ம் ஆண்டிற்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி (2022.11.27 - ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள சமர்ப்பிக்கும் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதித் திகதி 2022.07.29
2023.01.31 அன்று 11 வயதிற்குக் குறைந்த மற்றும் 10 அல்லது 10ற்கு மேற்பட்ட வயதுடைய, அரச பாடசாலையில் அல்லத அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் இப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் நிகழ்நிலை மூலமாகவே அனுப்ப முடியும் என்பதால் தவறுகள் விடப்படாதவாறு, மிகவும் சரியாகப் பூர்த்திசெய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள், பயனர்பெயர், கடவுச்சொல் என்பன கிடைக்கப்பெறாத அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளையுடன் தொடர்புகொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலையில் விண்ணப்பிக்க 👉👉👉 Click here

